பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த, கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
செஞ்சூரியனில் பாகிஸ்தான் -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி கடந்த 7ம் தேதியன்று நடந்தது . இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலின் தேர்வு செய்தது. இதனால் முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களை எடுத்தது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களான பகர் சமான் 106 ரன்கள் , இமாம் உல் ஹக் 57 ரன்கள் , பாபர் அசாம் 94 ரன்கள் மற்றும் ஹசன் அலி 32 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 321 இலக்காகக் கொண்டு விளையாடியது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. அதிகபட்சமாக ஜென்மன் மலான் 70 ரன்கள், வெரைன் 62 ரன்கள் ,பெலுக்வாயோ 54 ரன்கள் எடுத்தனர். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இறுதிகட்டத்தில் , 49.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. எனவே பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடரில் 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் சதமடித்த பகர் சாமானுக்கு தொடர் நாயகன் விருதும் ,பாபர் அசாம்க்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.