இறுதி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காததற்கு ,பயிற்சியாளர் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார் .
2021 சீசனின் ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .முதலில் பேட்டிங்கில் பஞ்சாப் அணி களமிறங்கியது .இறுதியில் பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் – மனன் வோஹ்ரா களமிறங்கினார்.இதில் பென்ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து மனன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்து விளையாடிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் .
தனி மனிதனாக போராடி சஞ்சு சாம்சன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதி ஓவரில் சஞ்சு சாம்சன் -கிறிஸ் மோரிஸ் இணைந்து விளையாடினார்.ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி 2 பந்துகளில் 5 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது . அப்போது சஞ்சு சாம்சன் அடித்த பந்து மிட் ஆன் திசையில் சென்றது. அதை பவுலர் கேட்ச் பிடித்து விட்டதால், ரன் எடுக்க ஓடாமல் அங்கேயே நின்றுவிட்டார் .ஆனால் ரன் எடுப்பதற்காக ஓடி வந்த கிறிஸ் மோரிஸ், பாதியிலேயே திரும்பி விட்டார். சஞ்சு சாம்சனின் செயலால் , கிறிஸ் மோரிஸ், ஆடுகளத்திலேயே கோவப்பட்டார். அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியை கைப்பற்றியது. சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் ,சிங்கிள் எடுக்க மறுத்ததற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதுபற்றி ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககரா கூறியபோது, சஞ்சு சம்சன் பொறுமையுடன் செயல்பட்டது பாராட்டுக்குரிய விஷயம் என்றும், அவர் தவறவிட்ட சிங்கிள்ஸ் பற்றி பேசவில்லை. சஞ்சு சாம்சன் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்று கடினமாக முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. இந்த போட்டியில் தவற விட்டார் அவர் ,இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக அதை சிறப்பாக செய்வார், என்று பயிற்சியாளர் சங்ககரா கூறியுள்ளார்.