கன்னியாகுமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஹோட்டலில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி, மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன்தொடர்பாக பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைக்குமாறு அங்கு இருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கடைகளை அடைத்துள்ளனர். மேலும் பெரிய வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அவர்களாகவே முன் வந்து கடைகளை அடைத்துள்ளனர்.
இவ்வாறு நேற்று மாநகராட்சி பகுதியில் இருக்கக்கூடிய சுமார் 40 க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக் கடைகள் போன்ற பெரிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.