இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் விவரங்களை பார்க்கையில் தொடக்க ஆட்டக்காரர் பிரீத்தி ஷா 43 ரன்னுடன் ( அவுட் ) கேப்டன் ஷிகார் தவான் ஆட்டமிழக்காமல் 71, இஷான் கிஷன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போதைய நிலையில் இந்திய அணி 31ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இலங்கை அணி அந்த நாட்டின் சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 7 ஆட்டங்களில் வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணில் விளையாடிய 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது