கடைகளில் மது அருந்துவதற்கு அனுமதித்ததாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வைத்து மது அருந்துவதற்கு மது பிரியர்களுக்கு அனுமதி அளித்து வருவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பரமசிவம், லோகநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் அவர்களது கடைகளில் சிலரை மது அருந்த அனுமதித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.