பழக்கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் இருக்கும் கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே சைலேஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணையை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்துள்ளனர். இதனையடுத்து செயற்கை வண்ணம் சேர்த்து தயார் செய்யப்பட்ட 5 கிலோ சிக்கன் 65 பறிமுதல் செய்து அழித்தனர்.
பின்னர் தடை செய்யப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முட்டை கடைகளை ஆய்வு செய்த போது சந்தேகத்தின் அடிப்படையில் முட்டைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் கெட்டுப்போன, உடைந்த முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.