Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடையில் விற்பனையா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கடையில் வைத்து குட்கா மற்றும் பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பான்பராக் மற்றும் குட்கா ஆகியவை ஒரு சில கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவருடைய உத்தரவின் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நியூடவுன் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் டீக்கடையில் மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதைப் போல் கேத்தாண்டப்பட்டி பகுதியில் வசிக்கும் தென்னரசு என்பவர் குட்கா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 200 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |