Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. அங்கு சிலிண்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள பொருள்களில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடையில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்நிலையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |