Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்றுவிட்டு வந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இளம் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை விரட்டிபத்து இருளாண்டிதேவர் காலனியில் பிரியா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து பிரியா எஸ். எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியாவிடம் நகை பறித்த அந்த பகுதியில்  உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகி இருப்பதனால் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |