Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்கும் போது…. வலையில் சிக்கியது என்ன….? வேதனையில் வாடும் மீனவர்கள்….!!

கடல் ஆக்குகள் அதிகமாக சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப் படகுகள் மூலம் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, தரகர் தெரு, மறவக்காடு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கடலில் கிடைக்கும் நண்டுகள், இறால்கள் மற்றும் பல வகையான மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீனவர்கள் கடலில் சென்று மீண்டும் மீன் பிடிக்க தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வலை விரித்து மீன்பிடிக்கும் போது கடல் ஆக்குகள் அதிகமாக சிக்குவதால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கின்றது. மேலும் அதிராம்பட்டினம் கடல் பகுதி மணலும், சேறும் கலந்ததாக இருப்பதால் அதிகமாக கடல் ஆக்குகள் சிக்குகின்றன. இதனால் அதிராம்பட்டினம் கடற்கரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Categories

Tech |