கடலைப்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/4 கப்
வர மிளகாய் – 5
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையானஅளவு
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய், வரமிளகாய், கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ள வேண்டும் .
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் அனைத்தும் ஆறியதும் , தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கொட்டிக் கிளறினால் சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார் !!!