Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கடலைப்பருப்பு காரச்சட்னி செய்வது எப்படி …

கடலைப்பருப்பு காரச்சட்னி

தேவையான பொருட்கள் :

கடலைப்  பருப்பு – 1/4 கப்

வரமிளகாய் – 8

தேங்காய் துருவல் –  1/4  கப்

புளி – சிறிது

உப்பு –  தேவைக்கேற்ப

கடுகு – 1/4 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

கடலை பருப்பு காரச் சட்னிக்கான பட முடிவுகள்

 

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்  பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும் . மிக்சியில் கடலைப்பருப்பு ,வரமிளகாய் ,தேங்காய், புளி , உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை , வரமிளகாய் , உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் சுவையான கடலைப்பருப்பு காரச்சட்னி தயார் !!!

Categories

Tech |