கடலைமாவு தோசை
தேவையான பொருட்கள் :
கடலைமாவு – 1 கப்
அரிசிமாவு – 1 கப்
எலுமிச்சை – 1
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் கடலைமாவு தோசை தயார் !!!