Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெற்றோர்… ‘அம்மா நான் சாக போறான்’… அலைபேசியில் மரணஓலை…!!!

காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு அடுத்துள்ள துண்டலம் பகுதியில் அண்ணா நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதுடைய அஸ்வினி எனும் மகள் இருக்கிறார். அஸ்வினி நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவள் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக அழைத்து  தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அந்த அழைப்பை துண்டித்துவிட்டார். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அருகிலுள்ள உறவினர்களை வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறினார்கள். உடனே அக்கம்பக்கம் இருந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு  இருந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைக்க முயற்சித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர்கள் அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  அந்த விசாரணையில், அஸ்வினி வேலூரில் உள்ள பிரகாஷ் என்னும் நபரைக் காதலித்து வந்தது தெரியவந்தது.

இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். பிரகாஷ் ராணுவத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலூருக்கு வந்திருந்தபோது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அஸ்வினி தற்கொலை செய்ததற்கான காரணம், அவளது காதலன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இறந்து விட்டான், என்ற மனக் கவலையில் இப்படி ஒரு பரிதாபமான முடிவு எடுக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |