Categories
உலக செய்திகள்

கடலில் போக்குவரத்து நெரிசல்… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரின் கப்பல் எகிப்து சூயஸ் கால்வாயில் தடுமாறி சுவரை மோதி நின்ற காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது

சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் என்ற கப்பல் மலேசியா வழியாக வந்து கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அன்று எகிப்தில் சூயஸ் கால்வாய் பகுதியை அடைந்தது அதன்பிறகு அங்கிருந்து கப்பல் நெதர்லாந்து ரோட்டர்டாமுக்கு செல்லும் போது  திடீரென வீசிய  பலத்த காற்றால்  கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து வட பக்கமுள்ள சுவரின் மீது உடனே கப்பல் பின்புற மேற்கு திசை நோக்கி தள்ளபட்டு அங்குள்ள சுவரின் மீது இடித்து நின்றது.

இந்த எகிப்து சூயஸ் கால்வாய் 1869 ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆயிரத்து 93 மீட்டர் நீளமும் 24 மீட்டர் ஆலமும் 105 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இது எகிப்தின் வருவாயை கூட்டுவதற்கு  மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கிறது. இந்த கால்வாயில் வருவாய்  பெருக்கும் நோக்கத்துடன் ஏகிப்த்  கடந்த 2015 ஆம் ஆண்டு பெரிய பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில்  சூயஸ் கால்வாயை விரிவாக்கம் செய்துள்ளது.

திடீரென எதிர்பாராமல் நிகழ்ந்த கப்பலில் நிலைய தடுமாற்றத்தை மற்றொரு கப்பலில் பயணம் செய்த பெண் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரி செய்வதற்க முயற்சிக்கும் வகையில் கப்பல் மோதிய கால்வாயின்இரு பகுதிகளிலும் மணல்களை அப்புறப்படுத்தி கப்பலை மீட்டெடுக்க முடியும் என்ற சூயஸ் திட்டமிட்டுள்ளது.

எவர்கிரீன் கப்பலினால் ஏற்பட்ட விபத்தினால் ஆசியாவின் மத்தியதரைக்கடல் பகுதி ஐரோப்பியாவின் செங்கடல் பகுதி இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர் வழித்தடம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல்களின் கால்வாய் வழித்தடம் மாற்றி தென்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளனர் .ஆகையால்  அங்கு கடல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. கப்பலை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது,

Categories

Tech |