விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது.
இதனை தொடர்ந்து வெனிஸ் நகருக்கு கடலில் சென்று கொண்டிருந்த படகோட்டிகளில் சிலர் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டனர். அதன்பின் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நீச்சல் வீரர்கள் மாயமான விமானத்தின் சிதைவுகளை கடலில் கண்டன. பின்னர் அதிலிருந்து ஒரு பெண் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர். மேலும் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் பெண் பயணிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் விமானி மாயமாகியிருப்பதால் அவரின் நிலைமை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.