நெதர்லாந்து அருபா தீவிற்கு அருகே உள்ள காவிரி கடலில் நெதர்லாந்து நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலோர காவல் படையினருக்கு உரிமையான என்ஹெச் 90 ஹெலிகாப்டர் ரோந்து பணியில் இருந்தபோது கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் ஹெலிகாப்டரில் பயணித்த விமான ஓட்டுநர் கிரிஸ்டியன் மார்டென்ஸ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எர்வின் வார்னீஸ் என்ற இரு நபர்களும் உயிரிழந்த நிலையில் மேலும் இரு நபர்கள் லேசான காயத்துடன் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். பலியான இரு நபர்களும் லெப்டினன்ட் நிலையிலான அதிகாரிகள்.
இத்தகைய விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் துறை தலைவர் ராப் பாயர் விபத்து பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். அதில் விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டர் கடற்படை ரோந்து கப்பல் சேர்ந்ததாகவும் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். கருப்புப்பெட்டி கிடைத்ததால் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என அறிய முடியும் என்றும் கூறினார். இந்நிலையில் விசாரணையானது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இரு ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நெதர்லாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்க் பிஜ்லெவெல்ட் ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார்.