நாகை மாவட்ட கடலோர காவல் நிலையங்களில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் திடீர் ஆய்வு நடத்தினார் .
கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திடீர் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து அவர் கடலோர கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீனவர்களின் பழக்க வழக்கங்களை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் மீனவ கிராமங்களில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் பிறகு வேதாரண்யம், கோடியக்கரை ,வேளாங்கண்ணி, நாகை ஆகிய கடலோர காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.