இந்திய கடலோர காவல் படை கப்பலானது ,மீனவரின் படகு மீது மோதியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த தவமணி என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் சந்திரகுமார் ,மகாலிங்கம் மற்றும் செல்வமணி அகிய 4 மீனவர்களும் புஷ்பவனம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் சம்பவ தினத்தன்று புஷ்பவனம் கடற்கரை கிழக்கே 7 நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலானது , மீனவரின் படகு மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கப்பல் மோதிய வேகத்தில் படகில் இருந்த மீனவர்கள் செல்வமணி மற்றும் மகாலிங்கம் இருவரும் கடலில் விழுந்தனர்.இதில் மீனவர் செல்வமணி கடலில் விழுந்தது படகில் இருந்த மற்றும் மீனவர்களுக்கு தெரியவில்லை. இதனால் சுமார் 2 மணி நேரமாக மீனவர் செல்வமணி கடலில் நீந்திக்கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த படகில் இருந்த மீனவர்கள் இவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதன் பிறகு மீனவர்கள் செல்வமணி ,மகாலிங்கம் இருவரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதில் கப்பல் மோதியதில் மீனவர் படகில் பின்புற பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் பகுதியில் சிறிதளவு சேதம் ஏற்படடுள்ளது.