Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் வருவது வழக்கம்…. கடலோரம் குவிந்த மீன்கள்…. அள்ளி சென்ற பொதுமக்கள்….!!

கடலோரம் பகுதியில் குவிந்த  மீன்களைப் பொதுமக்கள் சமையலுக்காக அள்ளி சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து கால்வாய்களில் ஓடிய வெள்ளம் மணக்குடி காயலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலில் கலந்துள்ளது. இந்நிலையில் கோவளம் கடலோரம் பகுதிகளில் அதிகமான நன்னீர் மீன்கள் கரை ஒதுங்கியதால் அதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மீனவர் வின்சென்ட் கூறியபோது, இதுபோன்று கனமழை பெய்யும் நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு, குளம் மற்றும் அணைகளில் மீன்கள் அடித்து வரப்பட்டு கடலில் வந்து சேருவது வழக்கம் என்று கூறியுள்ளார். எனவே குளம் மற்றும் ஆறுகளில் இருந்து வருகின்ற நன்னீர் மீன்கள் கடலில் உயிர்வாழ முடியாததால் சிறிய மீன்களில் இருந்து பெரிய மீன்கள் வரை கடலோரம் பகுதியில்  ஒதுங்குகின்றன. இதில் பெரிய மீன்களை மட்டும் பொதுமக்கள் எடுத்துச் சென்று சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர். மேலும் கடலோரம் பகுதிகளில் அதிகமாக கட்லா வகை மீன்கள் வருவதாக மீனவர் வின்சென்ட் கூறியுள்ளார்.

Categories

Tech |