Categories
கடலூர் மாநில செய்திகள்

எல்லாரும் குணமாகிட்டாங்க….. 2ஆக இருந்துச்சு….. கோயம்பேடு சம்பவத்தால 161 ஆகிடுச்சு….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் பணிபுரிந்த ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில்,

கடலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 900க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் முறையே தனியார் கல்லூரி, மாணவ மாணவியர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகிறது.

அதன் பின் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 3 பேருக்கு மட்டுமே கொரோனா முதன்முதலாக உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 28 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்படி,

நேற்று முன்தினம் வரை 53 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்னும் 430 பேருக்கான சோதனை முடிவுகள் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |