ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் மகன் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய முக ஸ்டாலின்,பொறுத்தார் பூமி ஆள்வார், ஆகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார்.
மேலும் பேசிய ஸ்டாலின், முதல்வர் பழனி சாமி கூறிய படி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர் என்று விமர்சனம் செய்தார்.