திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
அதே போல ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நா.புகழேந்தியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில் அதிமுக , திமுக சார்பில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து என்று அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.