பாகிஸ்தான் நாட்டின் பொது கடன் சுமார் 4 வருடங்களில் 14.9 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான்கான் உள்ளார். இதனை அடுத்து இவர் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே அந்த நாட்டினுடைய மொத்த கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சுமார் 4 வருடங்களில் மட்டும் பாகிஸ்தான் நாட்டின் பொது கடன் 14.9 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 50.5 ட்ரில்லியன் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் கூறியதாவது, பாகிஸ்தான் அரசாங்கம் செலுத்தவேண்டிய கடன் தொகை ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சனையாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.