தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கான் குளம் கிராமத்தில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சிதானந்ததிற்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த சச்சிதானந்தம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அதன்பின் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சச்சிதானந்தம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.