கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லடிவிளை சிவந்தமண் என்ற பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவர்களுடைய தாத்தா சந்திரன் பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து பிரபா பலரிடம் கடன் வாங்கி அந்த தொகையை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிரபா வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரன் கதவைத் திறந்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிரபாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பிரபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.