Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் கௌதமன் மன உளைச்சலில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தில் மயக்க மருந்தை கலந்து குடித்து விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கௌதமன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |