Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வி.சி. மோட்டூர் புதுத்தெருவில் மெக்கானிக் பாட்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்ஷாவிற்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாட்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |