Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கியது தெரிந்தால் அசிங்கமாகிவிடும்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்….!!

மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மளிகை கடைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுருளிஅள்ளியில் மூதாட்டி மங்கம்மாள் வசித்து வந்தார். இவரின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் உயிரிழந்து விட்டார். இதில் மங்கம்மாளுக்கு 2 பேத்திகள் இருக்கின்றனர். இந்த பேத்திகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த -ம் தேதியன்று மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ தாக்கிக் கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மூதாட்டி கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த மாது என்ற பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மாதுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

இது தொடர்பாக மாது கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது “நான் மளிகை கடையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மூதாட்டியிடம் எனது கணவருக்கு தெரியாமல் பணம் கடன் வாங்கினேன். இந்நிலையில் மூதாட்டி கொடுத்த கடனை அடிக்கடி என்னிடம் திரும்ப கேட்டு வந்தார். அப்போது பணத்தை தரவில்லை என்றால் உனது கணவரிடம் கூறி விடுவேன் என்று மூதாட்டி கூறினார். ஆகவே நான் கடன் வாங்கியது வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நான் கருதினேன்.

இதனால் கடந்த 30-ஆம் தேதி இரவு வேளையில் நான் மூதாட்டி மங்கம்மாள் வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கி கொலை செய்தேன். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் டி.வி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு அங்கிருந்து நான் வந்து விட்டேன். அதன்பின் 1-ம் தேதி அக்கம் பக்கத்தினர் மூதாட்டி வீட்டிலிருந்து டி.வி சத்தம் அதிகமாக வந்ததால் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.இதனைதொடர்ந்து காவல்துறையினர் மாதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |