Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்ட கருணாநிதி…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டியால் கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவருக்கு 200 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கருணாநிதி நாகராஜனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர் திருப்பி தர மறுத்துள்ளார்.

அதன்பின் கருணாநிதியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதில் காயமடைந்த கருணாநிதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |