Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடந்த 10 நாட்களாக திறக்கல” விவசாயிகளின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், தலைவாசல் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இருக்கின்றது. இதில் தற்போது 200 சேகோ ஆலைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மீதம் உள்ள ஆலைகள் கடந்த 10 தினங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிரிட்ட மரவள்ளியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மரவள்ளிகிழங்கை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மூடப்பட்டுள்ள சேகோ ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில தலைவரான ஏரியூர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். அப்போது லாரிகள் மூலம் விவசாயிகள் அந்த கிழங்கை கொண்டு வந்து சாலையில் கொட்ட முயற்சி செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் சுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், மண்டல துணை தாசில்தார் காத்தமுத்து, வருவாய் ஆய்வாளர் கனிமொழி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆகாத விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகளும், காவல்துறையினரும் தொடர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். எனினும் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதன் காரணமாக உடனடியாக ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது உதவி கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி வலியுறுத்தினர். இதனால் உதவி கலெக்டர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் சேகோ ஆலை நிர்வாகிகளிடம் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேகோ ஆலைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மேலும் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |