கதம்பப்பொடி
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 15
மிளகு – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் கதம்பப்பொடி தயார் !!!