பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த 2 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கடற்கரை மணலில் புதைந்த நிலையில் கிடந்த 2 சாமி சிலைகளை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதில் ஒரு சிலையான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மற்றும் மற்றொரு சிலையான சித்தர் சிலையையும் பத்திரமாக மீட்டனர்.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டினபாக்கம் கடற்கரை மணல் பகுதியில் புதைந்த நிலையில் கிடந்த சில சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் அதோடு சேர்ந்த சிலைகளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இந்த சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறுகின்றனர். தற்போது காவல்துறையினர் மயிலாப்பூர் தாசில்தாரிடம் சிலைகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.