சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரை சாலையில் மீனவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுடர்மணி புதுவண்ணாரப்பேட்டை கடற்கரையில் முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சுடர்மணி சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் உடனடியாக சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் கடற்கரையிலுள்ள உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.