Categories
சினிமா தமிழ் சினிமா

“கடத்தல் கும்பலில் சிக்கிய சிறுமி போராடும் நாயகன்” ஷூ திரை விமர்சனம்….!!!!

காமெடியனாக திரையுவதற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தில்காமெடியனாக திரையுலகத்திற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஷூ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகன் திலீபன் ஒரு விஞ்ஞானி. இவர் டைம் டிராவல் செய்யும் மிஷின் ஒன்றை கண்டுபிடித்து தனது ஷியுடன் இணைகிறார். இந்த மெஷின் பொருந்திய ஷூவை சோதனை செய்யும் பொழுது எதிர்ப்பறாத விதமாக போலீசாரிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது இந்த மரத்தடியில் மறைத்து வைத்துவிட்டு செல்கிறார். இந்த ஷூ செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள் கையில் கிடைக்கிறது. அவளிடம் இருந்து யோகி பாபு அந்த ஷூவை வாங்கி அணிகிறார்.

அதன்பிறகு அவர் வாழ்க்கையை மாறி விடுகிறது. இதற்கிடையில் ஒரு கும்பல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது. அப்போது குடிகாரன செருப்பு தொழிலாளி தனது மகளை பணத்திற்காக இந்த கும்பலிடம் விற்று விடுகிறார். இந்த கும்பலிடம் இருந்து அந்த சிறுமி எப்படி தப்பிக்கிறார்? அவர் வாழ்க்கை என்ன ஆனது? திலீபன் தனது டைம் டிராவல் மிஷின் ஷுவை மீட்டாரா?‌ என்பதை படத்தின் மீதி கதையாகும். அதனை தொடர்ந்து கதாநாயகனாக வரும் திலீபன் தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். சிறுமியை காப்பாற்றும் காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளார். யோகி பாபு தனக்கான காமெடி பாணியை பின்பற்றி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். சிறுமியாக வரும் பிரியா கதை காண எதிர்த்த நடிப்பை கொடுத்து ‌கவர்ந்திருக்கிறார். டெக்னிக்கலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண். முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் கதை இரண்டாம் பாதியில் ரசிகர்களை கவனிக்க வைக்க தவறி உள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகள் பெரும்பாலும் ஒரு இடத்தை நோக்கி நகர சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். மேலும் சி.எஸ். பாடல்கள் அனைத்து ரசிக்கும் படியாக உள்ளது. ஜேக்கப் ரத்தினராஜ், ஜெமின் ஜோம் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

Categories

Tech |