நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் .
நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி , குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது நட்சத்திர ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் . நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் . இதன்பின் இவர் தோஸ்தானா 2, ரூகி அப்சானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .
மேலும் இவர் தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட்லக் ஜெர்ரி படத்திலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியும் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . இதுகுறித்து அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிகபூர் ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறியுள்ளார்.பிரபல இயக்குனரின் படத்தில் குஷி நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .