Categories
சினிமா விமர்சனம்

“காதல், காமெடி, கலாட்டா”…. மொத்தத்தில் ரசிக்கலாம்….. “காபி வித் காதல்” படத்தின் திரை விமர்சனம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா, யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது பிரதாப் போத்தனுக்கு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என்ற 3 மகன்களும், டிடி என்ற ஒரு மகளும் இருக்கிறார். இதில் டிடி நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் இருக்க, ஸ்ரீகாந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி சம்யுக்தா என்ற மனைவி இருக்கிறார். அதன் பிறகு தந்தை ஜெய் மற்றும் ஜீவாவுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

அப்போது தான் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த அமிர்தாவை ஜெய் மறந்துவிட்டு தன்னுடைய தொழில் தொடங்கும் கனவிற்காக மாளவிகா சர்மாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா தத்தா ஜீவாவுடன் லிவிங் டூ கெதர் லைப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால் திடீரென ஐஸ்வர்யா தாத்தா ஜீவாவை பிரிய ஸ்ரீகாந்துடன் தகாத முறையில் உறவு வைத்திருந்த ரைசா வில்சனை திருமணம் செய்து கொள்வதற்கு ஜீவா ஒத்துக் கொள்கிறார். இந்நிலையில் ஜீவாவுக்கு மாளவிகா ஷர்மா மீதும் ஜெய்க்கு அமிர்தா மீதும் காதல் வந்ததால் திருமணத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பத்தை எல்லாம் தாண்டி கடைசியில் ஜீவா மற்றும் ஜெய்க்கு ஒரே மேடையில் திருமணம் நடந்ததா? காதலித்த பெண்ணை கரம்பிடித்தார்களா என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு, ஸ்ரீகாந்த் மனைவியான சம்யுக்தாவிடம் ஈடுபாடு காட்டாமல் ரைசா வில்சனிடம் குசும்பு செய்யும் காட்சிகள் படத்தில் நன்றாக வந்துள்ளது.

ஜெய் தன்னுடைய காதலித்த பெண்ணை கரம் பிடிப்பதா அல்லது தொழில் தொடங்குவதா என்ற கோணத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த, ஜீவா காதலித்த பெண் விட்டு சென்ற காரணத்தினால் தம்பிக்கு மணந்த பெண் மீது காதல் வர அவருடன் சண்டை செய்யும் காட்சிகள் என வித்தியாசமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கியுள்ளனர். மேலும் ஒட்டுமொத்தமாக படத்தை ரசிகர்கள் திரையில் பார்க்கும்போது ரசிக்கலாம்.

Categories

Tech |