Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐஞ்சு வருஷமா குழந்தை இல்லை… ஏறாத கோவிலும் இல்லை… பார்க்காத மருத்துவம் இல்லை… காதல் தம்பதி எடுத்த முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை.

இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல கோவில்களுக்கு சென்று வந்தனர் .மேலும் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும்  பெற்று வந்தனர். ஆனாலும் குழந்தை பிறக்காததால் தம்பதியினர் இருவரும் கடந்த  சில நாட்களாகவே மனவேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்ற இருவரும்  காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளனர் . அவர்களுக்கு அருகே விஷ பாட்டில் இருந்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |