Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் ரூ,1500 அபராதம் விதிக்கும் கிராமம் ….!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான தொகை காலதாமதமாக செலுத்தியதால் ஊர் நாட்டாமை ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளார். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நாட்டாமை ஆதரவாளர்கள் தாக்கியதில் ரவியின் தம்பி உயிரிழந்துவிட்டார்.

ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தாததற்காக ரவியின் குடும்பத்தை ஊர் நாட்டாமை ஒதிக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயிரிழந்த மதியழகனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உரிய  நேரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் மதியழகன் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் சடலத்தை வாங்க மறுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |