காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படாததால் அந்த இளம்பெண் வேறொரு ஊருக்கு சென்றுள்ளார்.
தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனை அறிந்த கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். அஜித் காதலித்த அந்த இளம்பெண் தனது சொந்த ஊரிலிருந்தே கல்லூரிக்கு வருவதற்கு அவ்வூரில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அதன்பின் அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற பேருந்தில் ஏறி கல்லூரிக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு பயணச்சீட்டு வாங்கி உள்ளார். அஜித்தும் அதே பேருந்தில் தான்அப்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இவரும் அமர்ந்து வந்துள்ளார்.
அப்பொழுது திடீரென இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என்று அஜித் அப்பெண்ணை மிகவும் கட்டாயப்படுத்தி கூறியுள்ளார். ஆனால் அவள் தன்னோடு இனி பேசவோ, பழகவோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.இதனால் அஜித் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். அஜித் தான் கொண்டுவந்த பையில் இருந்து பேனா கத்தி ஒன்றை எடுத்து அப்பெண்ணை நோக்கி “எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று ஆக்ரோஷமாக கூறி அவள் கழுத்தை அறுத்து விட்டார்.இதனால் ரத்த வெள்ளத்தில் பேருந்து குள்ளேயே மயங்கி விழுந்து விட்டார்.
பேருந்தில் இருந்த மற்ற பணியாளர்கள் பேருந்துக்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டு கத்தி அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர். பயணிகள் சத்தத்தை கேட்ட பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். பேருந்து நின்றவுடன் அஜித் அங்கிருந்து வேகமாக பேருந்தை விட்டு இறங்கி ஓடத் தொடங்கினார். ஆனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை சுற்றி வளைத்தனர். தஞ்சை போலீசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் சில போலீசார் ரத்த வெள்ளத்தில் படு காயங்களுடன் இருந்த அப்பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அந்த மாணவி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அஜித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணையில் அஜித்தும் அந்த பெண்மணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காதலித்து வந்தது தெரிய வந்தது.அஜித்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது அப்பெண்ணுக்கு தெரிய வந்ததுடன் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அஜித்தின் பழக்கவழக்கம் பிடிக்காத அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அஜீத்தை காதலிக்க வில்லை என கூறி விலகி சென்று விட்டார். ஆனால் அஜித்தோ அவளை விடாது தொல்லை செய்து வந்துள்ளார் இதனால் அப்பெண் வெளியூருக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கு முன் அம்மாணவி சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அஜித் அவரை சந்தித்து மீண்டும் தன்னை காதலிக்குமாறு மிகவும் தொல்லை செய்துள்ளார். ஆனால் அவள் மீண்டும் காதலிக்க ஒப்புக் கொள்ளாததால் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் தானும் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அம்மாணவி தன் பெற்றோரிடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவியின் கழுத்தை அஜித் கொடூரமான முறையில் அறுத்துள்ளார்.
இதை தொடர்ந்து அஜித் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததால் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவிடைமருதூர் சிறையில் அடைத்தனர்.காதலித்த பெண் தன்னை கைவிட்டதால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் செய்த செயல் அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.