திருவள்ளூர் மாவட்டதில் காதலனை சந்திக்க சென்ற, பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்பவர், தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்திருந்தபோது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 16 வயது சிறுமி ,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை, கோயம்பேடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜெகன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் காதலனை சந்திக்க , அந்த மாணவி பூரிவாக்கம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெகனின் உறவினர்கள், மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, அங்கு வந்த மகளை கண்டித்துள்ளார். ஆனால் மாணவி காதலனை விட்டு பிரிந்து வர முடியாது, என்று மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவியின் தந்தை திடீரென்று கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துள்ளார் . இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த மாணவியை உடனடியாக அங்கிருந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மாணவிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.