விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடிதான்’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தை இயக்கிய போது நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது . கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘லவ் யூ தங்கமே … காதலர் தின வாழ்த்துக்கள் அன்பான நண்பர்களே’ என்று பதிவிட்டுள்ளார் . ஜோடியாக போஸ் கொடுத்துள்ள விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.