காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி ,சஹோ போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது .
Watch the Glimpse Of #RadheShyam ❤️ #ValentinesWithRShttps://t.co/J80JcPG84B#Prabhas @hegdepooja @director_radhaa @UV_Creations @GopiKrishnaMvs @TSeries
— Gopi Krishna Movies (@GopiKrishnaMvs) February 14, 2021
இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததோடு படத்தில் இருந்து ஒரு காதல் காட்சியையும் படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் வருகிற ஜூலை 30 அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .