Categories
கல்வி மாநில செய்திகள்

கடினமாக இருந்த குரூப்-1 தேர்வு… கட்-ஆப் மதிப்பெண் குறையும் அபாயம்… தேர்வர்கள் அதிர்ச்சி…!!!

நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு நடப்பதற்கு முன்னதாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம்பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தால் வெளியிடப்படும்.

ஆனால் தற்போது நடந்து தேர்வு முன்பாக வெளியிட்ட மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இதனால் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு எளிதாக அமைந்து இருக்கும் என்று தேர்வர்கள் கூறினர். நீதி கட்சிகள் மற்றும் பெரியார் குறித்த கேள்விகள் அதிகம் இடம் பெற்றிருந்ததாகவும் கொரோனா தொடர்பாக 6 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி கொடுக்கப்பட்ட இரண்டு வினாக்களுக்கான பதில்களில் சரியான விடை இல்லை என்றும் தெரிவித்தனர். நடப்பு நிகழ்வுகள் என்ற தலைப்பில் “பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்யவும்”என்ற கேள்வி வினாத்தாளில் வித்தியாசமாக இடம் பெற்றிருந்ததை தேர்வர்கள் கூறினர். மேலும் இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், குரூப்-1 தேர்வை பொருத்தவரை முதல்நிலைத் தேர்வில் இருந்து முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |