நாம் அனைவர்க்கும் தெரிந்த கடுக்காயில் உள்ள பல நன்மைகள் பற்றி அறிவோம்.
நம் முன்னோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இயற்கையின் மருந்தினைப் பயன்படுத்தி தீர்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் இயற்கை மருந்தில் கடுக்காயும் ஒன்று. இது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது.
ஒருவனுடைய உடல் மனம் ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காய் என்று கூறப்படுகிறது. இதன் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எந்த சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. ஆனால் துவர்ப்பு சுவையே ரத்தத்தை அதிகரிக்க செய்வதாகும். எனவே அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால் நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் குணமாகும் நோய்கள்:
- கண் பார்வைக் கோளாறுகள்
- காது கேளாமை
- சுவையின்மை
- பித்த நோய்கள்
- வாய்ப்புண்
- தொண்டைப்புண்
- இரைப்பைப்புண்
- குடற்புண்
- ஆசனவாய் புண்
- போன்றவை நீங்கும்.
- அக்கி
- தேமல்
- படை
- தோல் நோய்கள்
- உடல் உஷ்ணம்
- வெள்ளைப்படுதல்
- மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
- சிறுநீர் எரிச்சல்
- பாத எரிச்சல்
- மூலம்
- ரத்தபேதி
- பௌத்திரக் கட்டி
- சர்க்கரை நோய்
- இதய நோய்
- மூட்டு வலி
- உடல் பலவீனம்
- உடல் பருமன்
- ரத்தக் கோளாறுகள்
- ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய் ஆகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயதானதால் ஏற்படும் தோல் சுருக்கம் நீங்கி இளமையாக தோற்றமளிப்பார்கள். இதை நீங்களும் சாப்பிட்டு இளமையாக நோய் இல்லாமல் வாழுங்கள்.