Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கிய 4மீனவர்கள்…! நீச்சல் போட்டு தப்பிய மூவர்…! ஒருவரை தேடும் பணி தீவிரம்…!!

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில்  பயணம் செய்த பூவரசன்,மகேஷ்,மாதவன் ஆகிய மூவரும் கடலிலிருந்து நீந்தி கரைக்கு வந்து விட்டனர். ஆனால் மருது பாண்டி மட்டும் கடல் அலையில் சிக்கி மாயமாகியுள்ளார். பின்னர் இதுகுறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்கு சென்று மீனவர் மருதுபாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |