பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்று கூறியுள்ளார் . மேலும் மூன்றாவது தேசிய ஊரடங்கு நிராகரிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , “பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கு கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவதுதான் சிறந்தது” என்று கூறியுள்ளார். இதற்கிடையே நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி, தளர்வுடன் கூடிய ஊரடங்கை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் வார இறுதியில் அதனை நான் ஊக்குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 24 ஆயிரத்து 116 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய வாரத்தை விட அதிகமானதாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவது ஊரடங்கு அடுத்த ஒரு வருடத்திற்கு அமலுக்கு கொண்டு வர வேண்டாம் என ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.