Categories
உலக செய்திகள்

கடவுள் நம்பிக்கையில்லாத இளம்பெண்…. வசமாக சிக்கிய இணையதளவாசிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பிரான்ஸில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்த அவதூறு வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்ட இளம்பெண் ஒருவருக்கு சமூக ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

பிரான்ஸில் 18 வயதுடைய mila என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கும் நிலையில், இஸ்லாம் மற்றும் குரான் குறித்த அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் இவருக்கு பலபேர் சமூக வலைதளங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் Mila விற்கு இணையத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் சிக்கிய 13 பேருக்கு நீதிபதி தண்டனை விதித்துள்ளார்.

அதாவது சமூக ஊடகங்களின் மூலம் ஒரு நபரை கிண்டல் செய்வதோ, கேலி செய்வதோ, கொலைமிரட்டல் விடுப்பதோ மிகவும் தவறான செயல் என்று கூறி குற்ற வழக்கில் சிக்கிய 11 பேருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்துள்ளார். அதோடு மட்டுமின்றி தலா ஒவ்வொருவருக்கும் 1,770 டாலர்கள் அபராதமும் விதித்துள்ளார்.

Categories

Tech |