Categories
சினிமா தமிழ் சினிமா

கையில வைச்சு இருக்கீங்க…! ” வாழ்த்து சொல்லி பாராட்டு” உற்சாகத்தில் அட்லீ..!!

இயக்குனர் அட்லீ கையில் ஒரு சிறந்த வெற்றி படம் இருக்கிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் அட்லி பேஷன் ஸ்டூடியோஸ் உடன் கூட்டணியில் அந்தகாரம் என்னும் படத்தை தயாரித்து வருகிறார்.  இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னராஜன், நடிகர் அர்ஜுன் தாஸ் வைத்து இயக்குகிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை பார்த்து அவர் கருத்து ஒன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;  அந்தகாரம் படத்தை பார்க்கும் சிறப்பான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைத்தது. இப்படியொரு புத்திசாலித்தனமான படைப்பை நான் இதுவரை சமீபத்தில் பார்த்ததில்லை. இயக்குனர் விக்னராஜன் கூறும் அருமையான கதை அம்சத்திற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷன் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர்.  மேலும் அட்லீ, உங்கள் கையில் ஒரு வெற்றி படம் இருக்கிறது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |