Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொற்று பரவும் அபாயம்…. காய்கறி கடைகள் இடமாற்றம்…. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்….!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது கொரனோ அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஆம்பூர் பாங்கி மார்க்கெட் பகுதியில் இயங்கி வருகின்ற காய்கறி கடைகள் தற்போது கிருஷ்ணாபுரம் சீனிவாச பெருமாள் சொந்தமான மைதானத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தாசில்தார் ஆனந்த் கிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார்.

Categories

Tech |